Bible Language

1 Chronicles 2:55 (AKJV) American King James Version

Versions

TOV   யாபேசில் குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும் சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.
IRVTA   யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே. PE
ERVTA   யாபேசில் குடியிருந்த எழுத்தாளர்களின் குடும்பங்கள், திராத்தியரும், சிமாத்தியரும் சுக்காத்தியரும் ஆவர். பெத்ரேகாப்பின் தந்தையான அம் மாத்திலிருந்து வந்த கேனியர்களே கணக்கர்கள்.
RCTA   யாபேசில் குடியிருந்த மறைவல்லுநரின் குலவழியினர், கூடாரங்களில் தங்கியிருந்தனர். பாடியும் (இசைக் கருவிகள்) மீட்டியும் வந்தனர். இவர்களே ரெக்காபுடைய குலத்தந்தையான காலோர் வழிவந்த கினேயராவர்.
ECTA   யாபேத்தில் குடியிருந்த எழுத்தரின் குடும்பங்கள்; திராத்தியர், சிமயாத்தியர், சூக்காத்தியர்; இரேக்கபு வீட்டாரின் மூதாதையான அமாத்திலிருந்து தோன்றிய கேனியர் அவர்களே.