Bible Language

1 Chronicles 4:9 (AKJV) American King James Version

Versions

TOV   யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
IRVTA   யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.
ERVTA   யாபேஸ் மிக நல்லவன். அவன் தனது சகோதரர்களைவிடச் சிறந்தவன். அவனது தாய், "நான் அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டேன். ஏனென்றால் நான் அவனைப் பெற்றபோது பெருந்துன்பம் அடைந்தேன்" என்றாள்.
RCTA   யாபேசு தம் சகோதரரை விட அதிகப் புகழ் பெற்றவராய் விளங்கினார். அவருடைய தாய், "நான் துக்கத்தோடு அவனைப் பெற்றேன்" என்று சொல்லி அவருக்கு யாபேசு என்று பெயரிட்டிருந்தாள்.
ECTA   யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் 'நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்' என்று சொல்லி அவருக்கு 'யாபேசு' என்று பெயரிட்டார்.