Bible Language

1 Samuel 9:9 (AKJV) American King James Version

Versions

TOV   முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிஷ்டிக்காரன் என்னப்படுவான்.
IRVTA   முற்காலத்தில் இஸ்ரவேலில் தேவனிடத்தில் விசாரிக்கப்போகிற எவனும் ஞானதிருஷ்டிக்காரனிடம் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்த நாளிலே தீர்க்கதரிசி எனப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.
ERVTA   (9-11) சவுல் தனது வேலைக்காரனிடம், “நல்ல யோசனை! நாம் போவோம்!” என்றான். எனவே, தேவமனிதன் தங்கி இருந்த நகருக்கு அவர்கள் சென்றார்கள்.
சவுலும், வேலைக்காரனும் நகரை நோக்கி மலை மீது ஏறிக்கொண்டிருந்தனர். சாலையில் அவர்கள் சில இளம் பெண்களை சந்தித்தார்கள். அந்த இளம் பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருத்தார்கள். சவுலும், வேலைக்காரனும் அந்த இளம் பெண்களிடம், “சீயர் இங்குதான் இருக்கிறாரா?” என்ற கேட்டார்கள், (முற்காலத்தில், இஸ்ரவேலில் இருந்த ஜனங்கள் தீர்க்கதரிசியை, “சீயர்” என்று அழைத்தார்கள். எனவே, அவர்கள் தேவனிடம் ஏதேனும் கேட்க வேண்டியிருந்தால், “நாம் சீயரிடம் போகலாமா?” என்பார்கள்.)
RCTA   முற்காலத்தில் இஸ்ராயேலில் கடவுளிடம் ஆலோசனை கேட்கப்போகிற எவனும், "திருக்காட்சியாளரிடம் போவோம். வாருங்கள்" என்பான்; ஏனெனில், இன்று இறைவாக்கினர் என்று சொல்லப்படுகிறவர் அக்காலத்திலே திருக்காட்சியாளர் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
ECTA   அக்காலத்தில் இஸ்ரயேலில் கடவுளின் திருவுள்ளத்தை நாடிச் செல்வோர் "வாருங்கள்" திருக்காட்சியாளரிடம் செல்வோம் "என்பர். ஏனெனில் இன்றைய இறைவாக்கினர் அன்று "திருக்காட்சியாளர்" என்று அழைக்கப்பட்டார்.