Bible Language

1 Timothy 4:3 (AKJV) American King James Version

Versions

TOV   விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
IRVTA   விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.
ERVTA   அவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்கின்றனர். சில உணவு வகைகளை உண்ணக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த உணவுகளை தேவனே படைத்திருக்கிறார். நம்புகிறவர்களும், உண்மையை அறிந்தவர்களும் அவற்றை நன்றியோடு உண்ணலாம்.
RCTA   அந்தப் பொய்யர்கள் திருமணத்தை விலக்குகின்றனர். சிலர் உணவுகளைத் தவிர்க்க வேண்டுமென்கின்றனர். உண்மையை நன்கறிந்த விசுவாசிகள் நன்றிக் கூறித் தூய்க்கவன்றோ இதெல்லாம் கடவுள் படைத்தார் ?
ECTA   அந்தப் பொய்யர்கள் திருமணத்தைத் தடை செய்கிறார்கள்; சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்; ஆனால், உண்மையை அறிந்த விசுவாசிகள் நன்றியுணர்வுடன் பெற்று உண்பதற்கே அந்த உணவுகளைக் கடவுள் படைத்துள்ளார்.