Bible Language

2 Chronicles 20:18 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள்.
IRVTA   அப்பொழுது யோசபாத் தரைவரை முகங்குனிந்தான்; சகல யூதா மக்களும், எருசலேமின் குடிமக்களும் யெகோவாவைப் பணிந்துகொள்ளக் யெகோவாவுக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள்.
ERVTA   யோசபாத் குனிந்து வணங்கினான். அவனது முகம் தரையைத் தொட்டது. யூதாவில் வாழும் ஜனங்களும் எருசலேமில் வாழும் ஜனங்களும் கர்ததருக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் அனை வரும் கர்த்தரை தொழுதுகொண்டனர்.
RCTA   இதைக் கேட்டவுடன் யோசபாத்தும் யூதா குலத்தார் அனைவரும் யெருசலேமின் குடிகளும் நெடுங்கிடையாய் விழுந்து ஆண்டவரை ஆராதித்தனர்.
ECTA   இதைக் கேட்டவுடன் யோசபாத்தும், அவருடன் யூதா, எருசலேம் வாழ்மக்கள் யாவரும் முகங்குப்புறத் தரையில் வீழ்ந்து ஆண்டவரை வணங்கினர்.