Bible Language

2 Samuel 11:21 (AKJV) American King James Version

Versions

TOV   எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.
IRVTA   எருப்பேசேத்தினுடைய மகன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை மதிலின் மேலிருந்து ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அவன்மேல் போட்டதால் அல்லவோ அவன் இறந்தான்; நீங்கள் மதிலிற்கு இவ்வளவு அருகில் போனது என்ன என்று உன்னோடு சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்று சொல் என்றான்.
ERVTA   எருப்சேத்தின் மகனாகிய அபிமெலேக்கை ஒரு பெண் கொன்றாள் என்பதை அவன் நிச்சயமாக அறிவான். அது தேபேசில் நடந்தது. அப்பெண் நகர மதிலில் அமர்ந்திருந்து அரைக்கிற கல்லின் மேல்பாகத்தை அபிமெலேக்கின் மேல் எறிந்தாள். எனவே ஏன் யோவாப் மதிலுக்கு மிக அருகே சென்றான்?’ என்றும் கேட்கக் கூடும். தாவீது அரசன் இவ்வாறு கூறினால் அவனிடம் இச்செய்தியைக் கூறவேண்டும். ‘உங்கள் அதிகாரிகளில் ஏத்தியனான உரியாவும் மரித்துவிட்டான்" என்றான்.
RCTA   யெரோபாவின் மகன் அபிமெலேக்கைக் கொன்றவன் யார்? தேபெசு நகர முற்றுகையின் போது ஒரு பெண் நகர மதிலின் மேலிருந்து எந்திரக் கல்லின் ஒரு துண்டை அவன் மேல் எறிந்ததாலன்றோ அவன் மடிந்தான்? நீங்கள் நகர மதில் அருகே சென்றது ஏன்?' என்று அரசன் உன்னிடம் சொன்னால், நீ அவரைப் பார்த்து, 'உம்முடைய ஊழியனும் ஏத்தையனுமான உரியாசும் மடிந்தான்' என்று சொல்" என்றான்.
ECTA   எருபசத்தின் மகன் அபிமெலக்கை கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக் கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா? அவன் தேபேசில் இறந்துவிட்டானே? நீங்கள் ஏன் மதில்களை நெருங்கினீர்கள்? என்று கேட்டால், நீ உம் பணியாளன் இறந்து விட்டான் என்று சொல்.