Bible Language

Ecclesiastes 6:2 (AKJV) American King James Version

Versions

TOV   அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.
IRVTA   அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும், பொருட்களையும், மதிப்பையும் கொடுக்கிறார்; அவன் என்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அனுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனிதன் அதை அனுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.
ERVTA   ஒருவனுக்கு தேவன் பெருஞ்செல்வத்தையும், சிறப்பையும், சொத்துக்களையும் கொடுக்கிறார். ஒருவன் தனக்குத் தேவையானவற்றையும் தான் விரும்புகின்றவற்றையும் பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவன் அவனை அவற்றை அனுபவிக்கும்படி விடுவதில்லை. எவனோ ஒரு அந்நியன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகிறான். இது மிகவும் மோசமான அர்த்தமற்ற ஒன்றாகும்.
RCTA   அதாவது: ஒரு மனிதனுக்குக் கடவுள் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் கொடுத்திருக்கிறார். அவன் ஆன்மா விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், அவைகளை அனுபவிக்கும் உரிமையைக் கடவுள் (அவனுக்குக்) கொடுக்கவில்லை. வேற்று மனிதனே அதை அனுபவித்து வருகிறான். இது மிகவும் வீணும் தொல்லையும் அன்றோ?
ECTA   கடவுள் ஒருவருக்குச் செல்வத்தையும் நல்வாழ்வையும் மேன்மையையும் கொடுக்கிறார். ஆம், அவர் விரும்புவதெல்லாம் அவருக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் துய்க்கவோ கடவுள் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை. அடுத்தவர் ஒருவர் அவற்றைத் துய்த்து மகிழ்கிறார். இங்கே பயனின்மையும் கடுந்துயரமும் காணப்படுகின்றன.