Bible Language

Isaiah 17:3 (AKJV) American King James Version

Versions

TOV   அரண் எப்பிராயீமையும், ராஜாங்கம் தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் புத்திரருடைய மகிமைக்கு நேரிட்டதுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் நேரிடும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   பாதுகாப்பு எப்பிராயீமையும், அரசாட்சி தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் மக்களுடைய மகிமைக்கு சம்பவித்ததுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் சம்பவிக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
ERVTA   எப்பிராயீமின் (இஸ்ரவேல்) அரணான நகரங்கள் அழிக்கப்படும். தமஸ்குவில் உள்ள அரசு முடிந்துவிடும். இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட அனைத்தும் சீரியாவிற்கு ஏற்படும். முக்கியமான ஜனங்கள் அனைவரும் வெளியே எடுத்துச்செல்லப்படுவார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவை அனைத்தும் நிகழும் என்று கூறினார்.
RCTA   எப்பிராயீமின் அரண்காவல் அழிந்து விடும், தமஸ்குவின் அரசுரிமை பறிக்கப்படும்; சீரியா நாட்டிலே எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களின் மகிமையைப் போல் ஆவார்கள் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
ECTA   எப்ராயிம் நாட்டின் அரண் தரைமட்டமாகும்; தமஸ்கின் அரசு இல்லாதொழியும்; இஸ்ரயேல் மக்களின் மேன்மைக்கு நேர்ந்தது சிரியாவில் எஞ்சியிருப்போரின் நிலைமையாகும், என்கிறார் படைகளின் ஆண்டவர்.