Bible Language

Joshua 15 (AKJV) American King James Version

Versions

TOV   யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.
IRVTA   {யூதா கோத்திரத்தார்களின் பங்கு} PS யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை.
ERVTA   யூதாவுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் அந்தக் கோத்திரத்திலிருந்த குடும்பங்களுக்கிடையில் பங்கிடப்பட்டது. அந்த நிலம் ஏதோம் எல்லையிலிருந்து தெற்காக தேமான் விளிம்பில் சீன் பாலைவனம் வரைக்கும் சென்றது.
RCTA   யூதாவின் புதல்வருக்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி கிடைத்த பங்கு வீதமாவது: ஏதோமுக்குத் தெற்கேயுள்ள சீன் என்ற பாலைவனம் துவக்கித் தென்புறத்துக் கடைசி எல்லை வரையாகும்.
ECTA   யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி தெற்கே ஏதோம் வரையிலும் அதன் தென்கோடி எல்லைசீன் பாலைநிலம் வரையிலும் அமைந்திருந்தது.