Bible Language

Joshua 18:7 (AKJV) American King James Version

Versions

TOV   லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.
IRVTA   லேவியர்களுக்கு உங்கள் நடுவே பங்கு இல்லை; யெகோவாவுடைய ஆசாரியத்துவமே அவர்களின் பங்கு; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு மறுபுறத்திலே கிழக்கே யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் பங்குகளைப் பெற்றுவிட்டார்கள் என்றான்.
ERVTA   லேவியர் தேசத்தில் எந்தப் பாகத்தையும் பெறவில்லை. கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதே அவர்களுக்குரிய பங்காகும். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தங்களுக்குரிய பாகத்தை காத், ரூபன் ஆகிய கோத்திரங்களும், மனாசே கோத்திரத்தின் பாதிக் குடும்பங்களும் பெற்றுக்கொண்டனர். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வசித்தனர். கர்த்தருடைய, ஊழியனாகிய மோசே, அவர்களுக்கு அத்தேசத்தைக் கொடுத்திருந்தான்" என்றான்.
RCTA   லேவியருக்கு உங்கள் நடுவே பங்கு கிடையாது. ஏனெனில் ஆண்டவருடைய குருக்களாய் இருப்பதே அவர்களுடைய சொத்து. காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்பக்கத்திலுள்ள கீழ்ப்புறத்திலே ஆண்டவருடைய அடியானான மோயீசன் தங்களுக்குக் கொடுத்திருந்த தங்கள் பங்கைப் பெற்றாயிற்று" என்றார்.
ECTA   லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில் ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து" என்றார். ஆண்டவரின் ஊழியர் மோசே அவர்களுக்குக் கொடுத்தபடி, காத்து, ரூபன், மனாசேயின் அரைக்குலம் ஆகியோர் தங்களுடைய உரிமைச் சொத்தினை யோர்தானுக்கு அப்பால் கிழக்கில் பெற்றனர்.