Bible Language

Lamentations 2:4 (AKJV) American King James Version

Versions

TOV   பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.
IRVTA   பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்;
எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று,
கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்;
மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார்.
ERVTA   கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார். அவர் தனது வாளை வலது கையில் ஏந்தினார். அவர் யூதாவினுள் கண்ணுக்கு அழகான ஆண்களை எல்லாம் கொன்றார். கர்த்தர் ஒரு பகைவனைப்போன்று அவர்களைக் கொன்றார். கர்த்தர் தனது கோபத்தை ஊற்றினார். அவர் சீயோனின் கூடாரங்களில் அதனை ஊற்றினார்.
RCTA   தாலேத்: எதிரியைப்போல வில்லை நாணேற்றினார், தம்முடைய வலக் கையைப் பலப்படுத்தினார்; பார்ப்பதற்கு அழகாயிருந்த அனைத்திற்கும் அவரே பகைவனாகி அழித்துவிட்டார்; சீயோன் மகளுடைய கூடாரத்தின் மேல் தம் கோபத்தைத் தீ மழைபோலக் கொட்டி விட்டார்.
ECTA   எதிரி போலத் தமது வில்லை நாணேற்றினார்; பகைவன் போலத் தம் வலக்கையை ஓங்கினார்; கண்ணுக்கு இனியவை அனைத்தையும் அழித்தார்; மகள் சீயோனின் கூடாரத்தில் தம் சினத்தை நெருப்பெனக் கொட்டினார்.