Bible Language

Exodus 14:13 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
IRVTA   அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
ERVTA   ஆனால் மோசே, "பயப்படாதீர்கள்! ஓடிப் போகாதீர்கள்! சும்மா இருந்து, கர்த்தர் இன்றைக்கு உங்களை மீட்பதைப் பாருங்கள். இந்த எகிப்தியர்களை இனிமேல் பார்க்கமாட்டீர்கள்!
RCTA   அப்போது மோயீசன் மக்களை நோக்கி: அஞ்ச வேண்டாம். நீங்கள் நின்று கொண்டே இன்று ஆண்டவர் செய்யப்போகிற மகத்துவங்களைப் பாருங்கள். உண்மையிலே நீங்கள் இப்போது காண்கிற இந்த எகிப்தியைரை இனி எந்தக் காலத்திலுமே காணப்போவதில்லை.
ECTA   மோசே மக்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை.