Bible Language

Ezekiel 16:27 (AKJV) American King James Version

Versions

TOV   ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக்குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
IRVTA   ஆதலால், இதோ, நான் என்னுடைய கையை உனக்கு எதிராக நீட்டி, உனக்கு நியமித்த உணவை குறைத்து, உன்னுடைய முறைகேடான வழியைக்குறித்து வெட்கப்பட்ட உன்னுடைய பகையாளிகளாகிய பெலிஸ்தர்களுடைய மகள்களின் ஆசைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
ERVTA   எனவே நான் உன்னைத் தண்டித்தேன். நான் உனது சம்பளத்தின் (நிலம்) ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன். உனது பகைவர்களான பெலிஸ்தருடைய குமாரத்திகள் (நகரங்கள்) அவர்கள் விருப்பப்படி உனக்கு வேண்டியதைச் செய்ய அனுமதித்தேன். அவர்கள் கூட உனது முறைகேடான செயல்களைப் பார்த்து வெட்கப்பட்டார்கள்.
RCTA   ஆகையால் இதோ நமது கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி, உனக்குரிய பங்கைக் குறைத்து, உன்னுடைய முறைகேடான நடத்தையைப் பார்த்து வெட்கப்படும் உன் பகைவார்களான பிலிஸ்தியரின் குமாரத்திகளுக்கு உன்னைக் கையளிப்போம்.
ECTA   ஆதலால் இதோ என் கரத்தை உனக்கு எதிராய் நீட்டி, உனக்குரிய பங்கைக் குறைப்பேன். உன் நெறிகெட்ட நடத்தையைப் பார்த்து, வெட்கி, உன்னை வெறுக்கும் பெலிஸ்திய நகர்களின் விருப்பத்திற்கு உன்னைக் கையளித்தேன்.