Bible Language

Genesis 27:37 (AKJV) American King James Version

Versions

TOV   ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான்.
IRVTA   ஈசாக்கு ஏசாவுக்கு மறுமொழியாக: “இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும் அவனுக்கு வேலைக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சைரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான்.
ERVTA   அதற்கு ஈசாக்கு, "இல்லை. இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நான் அவனுக்கு உன்மீது ஆளுகை செலுத்தும்படி ஆசீர்வதித்துவிட்டேன். அவனது சகோதரர்கள் அனைவரும் அவனுக்கு வேலை செய்வார்கள் என்றும் கூறிவிட்டேன். ஏராளமான உணவும் திராட்சைரசமும் பெறுவான் என்றும் ஆசீர்வதித்து விட்டேன். உனக்கென்று தர எதுவும் இல்லையே" என்றான்.
RCTA   அதற்கு, ஈசாக்: நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் சகோதரர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனைத் தானியத்தினாலும் திராட்சை இரசத்தினாலும் நிரப்பியுள்ளேன். அவை தவிர என் மகனே, நான் உனக்குச் செய்யத் தக்கது என்ன என, எசாயூ அவனை நோக்கி:
ECTA   "நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் உறவினர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனுக்குத் தானியத்தையும் திராட்சை இரசத்தையும் நிறைவாக வழங்கிவிட்டேன். இப்படி இருக்க என் மகனே! நான் உனக்கு வேறென்ன செய்ய முடியும்?" என்று சொல்ல,