Bible Language

Isaiah 14:19 (AKJV) American King James Version

Versions

TOV   நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.
IRVTA   நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் ஆடையைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்கு வெளியே எறிந்துவிடப்பட்டாய்.
ERVTA   ஆனால் தீய அரசனான நீ, உனது கல்லறையிலிருந்து தூக்கி எறியப்பட்டாய். நீ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளையைப் போல் வெட்டித் தூர எறியப்பட்டாய். நீ போர்க்களத்தில் விழுந்து மரித்த மனிதனைப் போலிருக்க மற்ற வீரர்கள் மிதித்துக்கொண்டு சென்றனர். இப்பொழுது, நீ மற்ற மரித்த மனிதர்களைப் போலிருக்கிறாய். கல்லறைத் துணிகளுக்குள் விழுந்து கிடக்கிறாய்.
RCTA   நீயோ கல்லறையினின்று புறம்பே எறியப்பட்டு அருவருப்பான அழுகல் போல விடப்பட்டாய்; வாளால் வெட்டுண்டு இறந்தவர்களின் உடல்களால் மூடப்பட்டாய்; பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு நாற்றமெடுத்த பிணம் போலக் கிடக்கின்றாய்.
ECTA   நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்; வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய்.