Bible Language

Isaiah 58:12 (AKJV) American King James Version

Versions

TOV   உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
IRVTA   உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த இடங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
ERVTA   உனது நகரங்கள் பல ஆண்டுகளுக்கு அழிக்கப்பட்டிருக்கும். ஆனால், புதிய நகரங்கள் கட்டப்படும். இந்நகரங்களின் அஸ்திபாரங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இருக்கும். நீ, "வேலிகளை கட்டுகிற ஒருவன்" என்று அழைக்கப்படுவாய். நீ, "சாலைகளையும் வீடுகளையும் கட்டுபவன்" என்றும் அழைக்கப்படுவாய்.
RCTA   பல்லாண்டுகளாய்ப் பாழடைந்து கிடந்த உன் இடங்கள் கட்டப்படும்; தலைமுறை தலைமுறையாய்க் கிடந்த அடிப்படைகளை நீ கட்டியெழுப்புவாய்; மதிற்சுவர் உடைப்புகளைக் கட்டுகிறவன் என்றும், மக்கள் குடியேறும்படி தெருக்களை அமைக்கிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
ECTA   உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.