Bible Language

Isaiah 58:3 (AKJV) American King James Version

Versions

TOV   நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
IRVTA   நாங்கள் உபவாசிக்கும்போது நீர் கவனிக்காமல் இருக்கிறதென்ன? நாங்கள் எங்களுடைய ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் ஆசையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச் செய்கிறீர்கள்.
ERVTA   இப்போது, அந்த ஜனங்கள், "உமக்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் சாப்பிடுவதை நிறுத்துகிறோம். எங்களை ஏன் பார்க்கவில்லை? நாங்கள் உமக்கு மரியாதை செலுத்த எங்கள் உடலைக் காயப்படுத்துகிறோம். நீர் "ஏன் எங்களைக் கண்டுகொள்ளவில்லை?" என்று கூறுகின்றனர். ஆனால் கர்த்தர் கூறுகிறார்: "நீங்கள் உங்களையே திருப்திப்படுத்திக்கொள்ள சிறப்பு நாட்களில் சாப்பிடாமல் இருக்கிறீர்கள். நீங்கள் சொந்த உடல்களை அல்ல, உங்கள் வேலைக்காரர்களையே தண்டிக்கிறீர்கள்.
RCTA   நாங்கள் உண்ணா நோன்பிருந்தோம், நீர் கண்ணோக்காததேன்? எங்களை நாங்களே ஒடுக்கினோம், நீர் அதை அறியாததேன்?' என்கிறார்கள். இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உங்கள் விருப்பத்தையே தேடுகிறீர்கள்; உங்கள் கூலியாட்களை வாட்டி வதைக்கிறீர்கள்.
ECTA   "நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்.