Bible Language

Isaiah 60:13 (AKJV) American King James Version

Versions

TOV   என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின்மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்டுத்துவேன்.
IRVTA   என் பரிசுத்த ஸ்தானத்தைச் அலங்கரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு மரங்களும், பாய்மர மரங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதபீடத்தை மகிமைப்படுத்துவேன்.
ERVTA   லீபனோனில் உள்ள மிகச்சிறந்த பொருட்கள் உனக்குக் கொடுக்கப்படும். ஜனங்கள் உனக்குத் தேவதாரு, பாய்மரம், புன்னை போன்ற மரங்களைக் கொண்டுவருவார்கள். இம்மரங்கள் எனது பரிசுத்தமான இடத்தைக் கட்டவும் மேலும் அழகுபடுத்தவும் பயன்படும். இந்த இடம் சிங்காசனத்திற்கு முன்பு உள்ள சிறு நாற்காலிபோல் இருக்கும். நான் இதற்கு பெருமதிப்பு கொடுப்பேன்.
RCTA   லீபானின் மகிமை உன்னை நாடி வரும், தேவதாரு, புன்னைமரம், ஊசியிலைமரம் ஆகியவை நமது பரிசுத்த இடத்தை அழகுபடுத்தக் கொண்டு வரப்படும்; நம் கால்மணையின் இருப்பிடத்தை நாம் மகிமைப்படுத்துவோம்.
ECTA   லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்; என் திருத்தூயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத் தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம் ஆகியவை கொண்டு வரப்படும்; என் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன்.