Bible Language

Jeremiah 10:9 (AKJV) American King James Version

Versions

TOV   தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.
IRVTA   தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடை; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.
ERVTA   அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும் ஊப்பாசிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் வைத்து அந்தச் சிலைகளைச் செய்திருக்கின்றனர். அந்த விக்கிரகங்கள், தச்சன்களாலும், தட்டான்களாலும் செய்யப்பட்டவை. அவர்கள் அந்த விக்கிரகங்களுக்கு, இளநீலமும், ஊதா ஆடையும் அணிவிக்கிறார்கள். "ஞானமுள்ளவர்கள்" அந்த "தெய்வங்களைச்" செய்கின்றனர்.
RCTA   தார்சீசினின்று சுத்த வெள்ளியும், ஒப்பாசினின்று பொன்னும் கொண்டுவரப் படுகின்றன; அவை சிற்பியின் வேலைப்பாடுகள்; தட்டானின் கைவேலைகள்; அவற்றை அவர்களே சிலைகளாகச் செய்தனர்; அவற்றின் உடை ஊதாவாலும் செம்பருத்தியாலும் ஆனது; அவை யாவும் தொழிலாளிகளின் வேலையேயன்றி வேறில்லை.
ECTA   தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும், ஊபாசிலிருந்து பொன்னும் வந்து சேர்கின்றன. அவை கைவினைஞரின் வேலைப்பாடுகள்; பொற்கொல்லனின் கைத்திறனால் ஆனவை; ஊதா, கருஞ்சிவப்பு உடைகளைக் கொண்டவை. அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற கைவினைஞரின் வேலைப்பாடுகள்.