Bible Language

Jeremiah 29:14 (AKJV) American King James Version

Versions

TOV   நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த இடத்துக்கே உங்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   நீங்கள் என்னைக் கண்டுப்பிடிக்க அனுமதிப்பேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார். "உங்கள் சிறையிலிருந்து திரும்பவும் நான் உங்களைக் கொண்டுவருவேன். இந்த இடத்திலிருந்து போகும்படி நான் உங்களை கட்டாயப்படுத்தினேன். ஆனால் உங்களை எங்கெங்கு அனுப்பினேனோ அங்கங்கிருந்தெல்லாம் அழைத்துச் சேர்ப்பேன். உங்களைக் கைதிகளாய் கொண்டுப்போகச் செய்த இந்த இடத்திற்கே மீண்டும் உங்களைக் கொண்டுவருவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
RCTA   ஆம், மெய்யாகவே நம்மைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர்; உங்களை அடிமைத்தனத்தினின்று மீட்டுக்கொண்டு வருவோம்; நாம் உங்களை விரட்டின எல்லா இடத்தினின்றும், எல்லா மக்களிடமிருந்தும் உங்களை ஒருமிக்கச் சேர்ப்போம், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்திலிருந்து நாம் உங்களை அனுப்பினோமோ, அந்த இடத்திற்கே திரும்பி வரச் செய்வோம்.
ECTA   ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்; நான் உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களிங்களினின்றும் இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்.