Bible Language

Jeremiah 29:18 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா மக்களிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், சத்தமிடுதலுக்கு இடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   நான், இன்னும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை பட்டயம், பசி, மற்றும் பயங்கரமான நோயால் துரத்துவேன். நான் இதனைச் செய்வேன். அதனால் அந்த ஜனங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பார்த்து பூமியில் உள்ள அனைத்து இராஜ்யங்களும் பயப்படும். அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். நிகழ்ந்தவற்றைப்பற்றி அவர்கள் கேள்விப்படும்போது ஜனங்கள் ஆச்சரியத்துடன் பிரமிப்பார்கள். அவர்கள், ஜனங்களுக்குத் தீயவை நடைபெறட்டும் என்று கேட்கும்போது ஜனங்கள் அவர்களை ஒரு எடுத்துக்காட்டாக பயன்படுத்துவர். அந்த ஜனங்களை நான் போகும்படி வற்புறுத்தும் போதெல்லாம் ஜனங்கள் அவர்களை நிந்திப்பார்கள்.
RCTA   அன்றியும் நாம் அவர்களைப் பஞ்சம், வாள், கொள்ளைநோய் இவற்றால் துன்புறுத்துவோம்; உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் திகிலாய் இருக்கச் செய்வோம்; நாம் அவர்களைச் சிதறடித்த எல்லா இனத்தார் நடுவிலும் அவர்களைச் சாபனைக்கும் திகைப்புக்கும் நகைப்புக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்குவோம்.
ECTA   வாள், பஞ்சம், கொள்ளைநோய் கொண்டு அவர்களைப் பின்தொடர்வேன். உலகின் எல்லா அரசுகளும் அவர்களை அருவருக்கும்படி செய்வேன்; நான் அவர்களை விரட்டியடித்துள்ள எல்லா நாடுகளிடையிலும் அவர்களைச் சாபத்திற்கும் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்குவேன்.