Bible Language

Jeremiah 33:11 (AKJV) American King James Version

Versions

TOV   இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்டகப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   இன்னும் கொண்டாட்டத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகனின் சத்தமும், மணமகளின் சத்தமும்: சேனைகளின் யெகோவாவை துதியுங்கள், யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், யெகோவாவுடைய ஆலயத்திற்கு நன்றி பலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போல இருப்பதற்கு தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   அங்கே மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரிய ஓசைகள் கேட்கும். அங்கு மணமகள் மற்றும் மணமகனின் மகிழ்ச்சிகரமான ஓசை கேட்கும். கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் காணிக்கைகளைக் கொண்டு வரும் ஓசை கேட்கும். அந்த ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய தயவு என்றென்றும் தொடரும்’ என்று கூறுவார்கள். ஜனங்கள் இதனைக் கூறுவார்கள். ஏனென்றால் நான் மீண்டும் யூதாவிற்கு நல்லவற்றைச் செய்வேன். இது தொடக்கத்தைப்போன்று இருக்கும்." கர்த்தர் இவற்றைக் கூறினார்.
RCTA   அக்களிப்பின் ஆரவாரமும், மகிழ்ச்சிச் சந்தடியும், மணவாளன் மணவாட்டியின் குரலொலியும், 'ஆண்டவர் நல்லவர், எல்லையில்லா இரக்கமுள்ளவர்; ஆதலால் அவரைப் போற்றுங்கள்' என்று சொல்லிப் பாடிக் கொண்டே ஆண்டவரின் கோயிலுக்குக் காணிக்கைகள் கொண்டு போகிறவர்களின் சந்தடியும் திரும்பவும் கேட்கும்; ஏனெனில் இந்நாட்டினை பண்டைக் காலத்தில் இருந்தவாறு மீண்டும் நிலைநாட்டுவோம், என்கிறார் ஆண்டவர்.
ECTA   மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும், மணமகன் மணமகள் குரலொலியும் மீண்டும் கேட்கும். 'படைகளின் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றுமுள்ளது' எனப் பாடியவாறு இல்லத்திற்கு நன்றிப் பலிகளைக் கொண்டுசெல்வோரின் பேரொலியும் கேட்கும்; ஏனெனில், நாட்டை நான் அடிமைத்தனத்தினின்று விடுவித்து முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவேன், என்கிறார் ஆண்டவர்.