Bible Language

Jeremiah 34:7 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.
IRVTA   அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் மீதியான பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் போர் செய்துகொண்டிருந்தது; யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களில் இவைகளே தப்பியிருந்தவைகள். PS
ERVTA   பாபிலோனது அரசனின் படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிட்டபோது இது இருந்தது. பாபிலோனின் படையும் யூதாவின் கைப்பற்றப்படாத நகரங்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். லாகீசும் அசெக்காவும் அந்நகரங்களாகும். யூதா தேசத்தில் மீதியுள்ள கோட்டைகளால் அமைந்த நகரங்கள் இவை.
RCTA   அப்போது பபிலோனிய அரசனது படை யெருசலேமுக்கு எதிராயும், எஞ்சியிருந்த யூதாவின் பட்டணங்களாகிய இலக்கீசு, அஜக்கா என்பவற்றிற்கு எதிராயும் போர் செய்து கொண்டிருந்தது. ஏனெனில், இவ்விரண்டு பட்டணங்களுந் தான் யூதாவின் கோட்டை சூழ்ந்த நகரங்களில் பிடிபடாமல் மீதியாய் நின்றவை.
ECTA   அப்பொழுது எருசலேமுக்கு எதிராகவும், யூதாவின் அரண்சூழ் நகர்களுள் எஞ்சியிருந்த இலாக்கிசு, அசேக்காவுக்கு எதிராகவும் பாபிலோனிய மன்னனின் படை போரிட்டுக் கொண்டிருந்தது.