Bible Language

John 1:15 (AKJV) American King James Version

Versions

TOV   யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
IRVTA   யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான்.
ERVTA   அவரைப் பற்றி யோவான் மக்களிடம், நான் சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ԅஎனக்குப் பின்னால் வருகிறவர் என்னிலும் மேலானவர். இவர் எனக்கு முன்னரே இருப்பவர் என்று சாட்சி சொன்னான்.
RCTA   அருளப்பர் அவரைக்குறித்துச் சான்றாக, "எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் முன்னிடம் பெற்றார்; நான் சொன்னது இவரைப்பற்றியே ஏனெனில், எனக்குமுன்பு இருந்தார்." என உரக்கக் கூவினார்.
ECTA   யோவான் அவரைக் குறித்து, "எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்;" என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.