Bible Language

Judges 12:3 (AKJV) American King James Version

Versions

TOV   நீங்கள் என்னை இரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
IRVTA   நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; யெகோவா அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
ERVTA   நீங்கள் எங்களுக்கு உதவ வரமாட்டீர்கள் என்பதை நான் கண்டேன். எனவே நான் எனது உயிரைப் பணயம் வைத்து, நதியைக் கடந்து அம்மோனிய ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றேன். அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் எனக்கு உதவினார். இப்போது ஏன் என்னை எதிர்த்துப் போரிட இன்றைக்கு வந்திருக்கிறீர்கள்?" என்றான்.
RCTA   அதைக் கண்டபோது நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அம்மோன் புதல்வர் நாட்டுக்குப் போய் அவர்களை எதிர்த்தேன். ஆண்டவரும் அவர்களை என் கையில் ஒப்படைத்தார். நீங்கள் எனக்கு எதிராய் எழுந்து வர நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று சொல்லி,
ECTA   நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன். ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார். இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்?" என்று கேட்டார்.