Bible Language

Genesis 37:10 (ASV) American Standard Version

Versions

TOV   இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.
IRVTA   இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: “நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ” என்று அவனைக் கடிந்துகொண்டான்.
ERVTA   அவன் அக்கனவைத் தந்தையிடமும் சொன்னான். ஆனால் அவனது தந்தை அவனை விமர்சனம் செய்து, "என்ன மாதிரியான கனவு இது? நானும் உனது தாயும் சகோதரர்களும் உன்னை வணங்குவோம் என நினைக்கிறாயா?" என்று கேட்டான்.
RCTA   இதை அவன் தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் தெரிவித்த போது, அவனுடைய தந்தை அவனைக் கண்டித்து: நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும் உன் சகோதரர்களும் இவ்வுலகில் உன்னை வணங்க வேண்டுமோ என்றான்.
ECTA   இதை அவர் தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விவரித்தபோது, அவர் தந்தை அவரைக் கண்டித்து, "நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும், உன் சகோதரர்களும் தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?" என்று கேட்டார்.