Bible Language

Leviticus 7:21 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
IRVTA   மனிதர்களுடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த பொருளையாவது ஒருவன் தொட்டிருந்து, யெகோவாவுடைய சமாதானபலியின் மாம்சத்திலே சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்” என்றார்.
ERVTA   "ஒருவன் தீட்டான ஒன்றைத் தொட்டுவிடலாம். அது மனிதர்களாலோ, தீட்டான மிருகங்களாலோ அல்லது தீட்டான வெறுக்கத்தக்கப் பொருளாலோ தீட்டாகியிருக்கலாம். ஒருவன் அதனைத் தொட்டதால் தீட்டாகிவிடுகிறான். அவன் கர்த்தருக்கு அசுத்த மானவனாக இருந்தும், சமாதானப் பலிக்குரிய இறைச்சியை உண்டால், பிறகு மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்" என்று சொன்னார்.
RCTA   அப்படியே மனிதனுடைய தீட்டையோ மிருகத்தினுடைய தீட்டையோ, அல்லது தீட்டுப்படுத்தக் கூடிய வேறெந்தப் பொருளின் தீட்டையோ, தொட்டபின் (மேற்சொன்ன) இறைச்சியை உண்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான் என்றருளினார்.
ECTA   தீட்டான எதையும் தீட்டுப்பட்ட மனிதரையோ கால்நடையையோ, தீட்டான ஊர்வனவற்றையோ ஒருவர் தீண்டியவராக இருந்து ஆண்டவருக்குப் படைக்கும் நல்லுறவுப்பலி இறைச்சியை உண்டால், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.