Bible Language

1 Peter 5:12 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
IRVTA   {இறுதி வாழ்த்துரை} PS உங்களுக்குப் புத்திசொல்லுவதற்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை, தேவனுடைய உண்மையான கிருபைதான் என்று சாட்சியிடுவதற்கும், நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதி, உண்மையுள்ள சகோதரனாக எனக்குத் தோன்றுகிற சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
ERVTA   சில்வானுவின் உதவியோடு இந்தச் சிறிய நிருபத்தை உங்களுக்கு எழுதினேன். அவன் நம்பிக்கைக்குத் தகுதியான கிறிஸ்தவ சகோதரன் என்பதை நான் அறிவேன். உங்களை உற்சாகப்படுத்தவும் உங்களுக்கு உறுதிப்படுத்தவும், இதுவே தேவனுடைய உண்மையான கிருபை என்பதை எழுதி இருக்கிறேன். அந்தக் கிருபையில் உறுதியாக நில்லுங்கள்.
RCTA   நம்பிக்கைக்குரியவன் என நான் கருதும் உங்கள் சகோதரன் சில்வானுவின் வழியாக உங்களுக்குச் சுருக்கமாக எழுதியனுப்பினேன். உங்களுக்கு அறிவுரை கூறவும், கடவுளுடைய உண்மை அருள் இதுவே எனச் சான்று பகரவும் விரும்பினேன்.
ECTA   நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள்.