Bible Language

1 Samuel 26 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.
IRVTA   {சவுல் மறுபடியும் தாவீதைக் கொலைசெய்யத் தேடுதல்} PS பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளிந்துகொண்டிருக்கிறான் என்றார்கள்.
ERVTA   சீப் ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றார்கள். அவர்கள் சவுலிடம், "தாவீது ஆகிலா மேட்டில் ஒளிந்திருக்கிறான். அந்த இடம் எஷிமோனை அடுத்துள்ளது" என்று சொன்னார்கள்.
RCTA   ஜிப் ஊரார் காபாவில் இருந்த சவுலிடம் வந்து, "இதோ தாவீது பாலைவனத்துக்கு எதிரான அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்" என்று சொன்னார்கள்.
ECTA   பின்னர் சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்" என்று கூறினர்.