Bible Language

Exodus 10:12 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.
IRVTA   அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் சாப்பிடும்படி, எகிப்து தேசத்தின்மேல் உன்னுடைய கையை நீட்டு” என்றார்.
ERVTA   கர்த்தர் மோசேயை நோக்கி, "இப்போது உன் கைகளை எகிப்து தேசத்திற்கு மேலாக உயர்த்து, அப்போது எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வந்து பரவும். புயல் அழிக்காமல்விட்ட எல்லா தாவரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிடும்" என்றார்.
RCTA   அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து நாட்டின் மேல் வந்து, ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய எவ்வகைப் புல்லையும் பயிரையும் தின்னும் படி, நீ எகிப்து நாட்டின் மேல் உன் கையை நீட்டு என்றார்.
ECTA   ஆண்டவர் மோசேயை நோக்கி, "கல் மழைக்குத் தப்பி நாட்டில் நிற்கும் எல்லாப் பயிர் பச்சைகளையும் தின்று தீர்க்க எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வரும்படியாக எகிப்து நாட்டின் மேல் உன்கையை நீட்டு" என்றார்.