Bible Language

Judges 12 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   எப்பிராயீம் மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.
IRVTA   {யெப்தாவும் எப்பிராயீமும்} PS எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி யோர்தான் நதியை கடந்து வடக்கே உள்ள சாபோன் ஊருக்குப் போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.
ERVTA   எப்பிராயீம் கோத்திரத்தின் மனிதர்கள் தம் வீரர்கள் எல்லோரையும் ஒருங்கே அழைத்து நதியைக் கடந்து சாபோன் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யெப்தாவிடம், "அம்மோனிய ஜனங்களை எதிர்த்து நீங்கள் போரிடும்போது ஏன் எங்களை அழைக்கவில்லை? உங்களையும் உங்கள் வீட்டையும் நாங்கள் எரித்துப்போடுவோம்" என்றனர்.
RCTA   அப்பொழுது எபிராயிம் வம்சத்தில் கலகம் உண்டானது. அவர்கள் வடக்கே சென்று ஜெப்தேயை நோக்கி, "அம்மோன் புதல்வருக்கு எதிராய் நீ போருக்குப் போகையில் நாங்களும் உன்னுடன் வர எங்களை ஏன் அழைக்கவில்லை? அதன் பொருட்டு உன் வீட்டைச் சுட்டெரித்துப் போடுவோம்" என்றனர்.
ECTA   எப்ராயிம் மக்கள் ஒன்று திரண்டு சாப்போனைக் கடந்து சென்று இப்தாவிடம், "எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர்?" என்று கேட்டனர். உமக்கு எதிராக நாங்கள் உம் வீட்டை நெருப்பில் எரிப்போம்" என்றனர்.