Bible Language

Nehemiah 6:3 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.
IRVTA   அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரமுடியாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருவதால் இந்த வேலை நின்றுவிடும் என்று சொல்லச்சொன்னேன்.
ERVTA   எனவே நான்: "முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். நான் அங்கு வர முடியாது. நான் கீழே வந்து உங்களைச் சந்திப்பதால் இந்த வேலை தடைபடுவதை விரும்பவில்லை" என்கிற பதிலோடு அவர்களிடம் தூதர்களை அனுப்பினேன்.
RCTA   அப்பொழுது நான் அவர்களிடம் தூதர்களை அனுப்பி, "எனக்கு அதிகம் வேலை இருக்கிறது. எனவே நான் வர இயலாது. வந்தேனானால் வேலை முடங்கிப் போகும்" என்று சொல்லச் சொன்னேன்.
ECTA   அப்பொழுது நான் அவர்களிடம் தூதனுப்பி, "முக்கியமான அலுவலில் நான் ஈடுபட்டுள்ளேன் எனவே நான் இந்த வேலையை விட்டுவிட்டு உங்களிடம் வந்தால் இது முடங்கிவிடும் அன்றோ!" என்றேன்.