Bible Language

Romans 7:2 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.
IRVTA   அது எப்படியென்றால், கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறாள்.
ERVTA   நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். ஒரு மணமான பெண் தன் கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் தன் கணவனோடு வாழ சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளாள். ஆனால் அவன் இறந்து போனால், அவள் திருமண விதிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள்.
RCTA   எடுத்துக்காட்டாக, மணமான பெண் ஒருத்தி, கணவன் உயிரோடு இருக்கும் வரையில் தான் திருமணச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். கணவன் இறந்துவிட்டால் அந்தச் சட்டத்திலிருந்து விடுதலை பெறுகிறாள்.
ECTA   எடுத்துக்காட்டாக, மணமான பெண் ஒருவர் கணவன் உயிரோடு இருக்கும் வரையில்தான் திருமணச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறார்; கணவன் இறந்துவிட்டால், கணவனோடு வாழ வேண்டும் என்கிற சட்டத்திலிருந்து விடுதலை பெறுகிறார்.