Bible Language

Romans 7:7 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே, பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
IRVTA   {பாவத்தோடு போராட்டம்} PS எனவே, என்னசொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை; “இச்சிக்காமல் இருப்பாயாக” என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே.
ERVTA   சட்டவிதியையும் பாவத்தையும் நான் ஒரே விதமாக நினைப்பதாக நீங்கள் எண்ணக் கூடும். அது உண்மையல்ல. ஆனால் சட்ட விதியின் மூலமாகவே நான் பாவமென்றால் என்னவென்று புரிந்து கொண்டேன். பிறர் பொருள் மேல் ஆசைப்படாமல் இருங்கள் என்று சட்டவிதி சொல்லாமல் இருந்தால் அது பாவம் என்று எனக்கு தெரியாமல் போயிருக்கும்.
RCTA   அப்படியானால், நாம் என்ன சொல்வது? சட்டமும் பாவமும் ஒன்றுதானா? ஒருகாலும் இல்லை. ஆயினும், சட்டம் இல்லாதிருந்தால் நான் பாவத்தை அறிந்திருக்க மாட்டேன். ஏனெனில், 'இச்சியாதே' எனச் சட்டம் சொல்லாமற்போயிருந்தால், இச்சை என்பது என்ன என்றே நான் அறிந்திருக்கமாட்டேன்.
ECTA   அப்படியானால் என்ன சொல்வோம்? திருச்சட்டமும் பாவமும் ஒன்றுதானா? ஒருபோதும் இல்லை. ஆயினும் திருச்சட்டம் வழியாய் அன்றிப் பாவம் என்ன என்று நான் அறிந்திருக்கமாட்டேன். எப்படியெனில், "பிறருக்குரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே" என்று சட்டம் சொல்லாமல் போயிருந்தால், அவ்விருப்பம் என்ன என்றே அறிந்திருக்க மாட்டேன்.