Bible Language

Acts 13:8 (GNTBRP) Byzantine Greek New Testament

Versions

TOV   மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான்.
IRVTA   மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான்.
ERVTA   ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான்.
RCTA   ஆனால், எலிமா என்னும் அந்த மந்திரவாதி அவர்களை எதிர்த்து, ஆளுநன் விசுவசிப்பதைத் தடுக்க முயற்சி செய்தான். ( எலிமா என்பதற்கு மந்திரவாதி என்பதுதான் பொருள். )
ECTA   எலிமா என்னும் மந்திரவாதி அவர்களை எதிர்த்து நின்று ஆட்சியாளர் நம்பிக்கை கொள்ளாதபடி அவரது கவனத்தைத் திருப்ப முயன்றான். - எலிமா என்றாலே மந்திரவாதி என்பது தான் பொருள்.