Bible Language

Leviticus 6:12 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.
IRVTA   பலிபீடத்தின்மேலிருக்கிற நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டு எரிக்கக்கடவன்.
ERVTA   பலிபீடத்தின் நெருப்பானது தொடர்ந்து பலிபீடத்தின் மேல் எரிய வேண்டும். அதனை அணைந்து போகும்படி விடக்கூடாது. ஆசாரியன் ஒவ்வொரு நாள் காலையிலும் விறகு வைத்து நெருப்பை அதிகரிக்க வேண்டும். அவன் அந்த விறகை பலிபீடத்தில் வைக்க வேண்டும். அவன் அதனோடு சமாதானப் பலியின் கொழுப்பையும் போட்டு எரிக்க வேண்டும்.
RCTA   நெருப்போ எப்பொழுதும் பீடத்தில் எரிந்து கொண்டிருக்கும். குரு நாள் தோறும் காலையில் விறகுகளை இட்டு, அதன் மீது தகனப் பலியையும் சமாதானப் பலிகளின் கொழுப்பையும் வைத்து எரிக்கக்கடவார்.
ECTA   பலிபீடத்தின்மேல் இருக்கிற நெருப்போ அணையாமல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும். காலைதோறும் குரு அதன்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து, அதன்மேல் எரிபலியை அடுக்கி அவற்றின் மீது நல்லுறவுப் பலிகளின் கொழுப்பை இட்டு எரிக்கவேண்டும்;