Bible Language

Luke 23:2 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.
IRVTA   இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
ERVTA   அவா்கள் இயேசுவைப் பழிக்க ஆரம்பித்தாா்கள் பிலாத்துவிடம் அவா்கள், நமது மக்களைக் குழப்புகிற செய்திகளைக் கூறுகிறபடியால் இந்த மனிதனை நாங்கள் பிடித்து வந்தோம். இராயனுக்கு வரி கொடுக்கக் கூடாதென்று அவன் கூறுகிறான். அவன் தன்னைக் கிறிஸ்துவாகிய அரசா் என்று அழைக்கிறான் என்றனா்.
RCTA   இவன் நம் மக்களிடையே குழப்பம் உண்டாக்குகிறன். செசாருக்கு வரிசெலுத்தக் கூடாதென்கிறான். 'தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்ளுகிறான். இப்படியெல்லாம் இவன் செய்யக்கண்டோம்" என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினர்.
ECTA   "இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்" என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.