Bible Language

2 Kings 15:29 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
IRVTA   இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிமக்களைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
ERVTA   அசீரியாவின் அரசனான திகிலாத்பிலேசர், வந்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டான். அப்போது இஸ்ரவேலில் பெக்காவின் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது. திகிலாத்பிலேசர், ஈயோன், பெத்மாக்கா எனும் ஆபேல், யனோவாக், கேதேஸ், ஆத்சோர், கீலேயாத், கலிலேயா, நப்தலியின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி இப்பகுதியிலுள்ள ஜனங்களைச் சிறைபிடித்து அசீரியாவிற்குக் கொண்டுபோனான்.
RCTA   இஸ்ராயேல் அரசன் பாசேயுடைய ஆட்சி காலத்தில், அசீரியரின் அரசன் தெகிளாத்-பலசார் இஸ்ராயேல் நாட்டின் மீது படையெடுத்து வந்து அயியோனையும், மவாக்காவிலுள்ள அபேல் என்ற இடத்தையும், ஜானோயே, கேதஸ், அசோர், காலாத், கலிலேயா ஆகிய இடங்களையும், நெப்தலி நாடு முழுவதையும் பிடித்ததுமன்றி, அந்நாட்டுக் குடிகளையும் சிறைப்பிடித்து அசீரியா நாட்டிற்குக் கொண்டு போனான்.
ECTA   இஸ்ரயேல் அரசன் பெக்காவின் ஆட்சிக் காலத்தில், அசீரியா மன்னன் திக்லத்-பிலேசர் படையெடுத்து வந்து, ஈயோன் ஆபல்பெத்மாக்கா, யானோவாக்கு, கெதேசு, ஆட்சோர் ஆகிய நகர்களையும் கிலயாது, கலிலேயா, நப்தலி ஆகிய நிலப்பகுதிகளையும் கைப்பற்றினான்; மேலும் மக்களை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்.