Bible Language

Acts 10:28 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
IRVTA   அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார்.
ERVTA   பேதுரு மக்களை நோக்கி, யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ԅதூய்மையற்றவன் எனவும், ԅசுத்தமற்றவன் எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார்.
RCTA   அவர்களை நோக்கி, "அன்னிய குலத்தாருடன் உறவாடுவதோ, அவர்களுடைய வீட்டிற்குச் செல்வதோ ஒரு யூதனுக்குத் தகாது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் யாரையும் தீட்டு உள்ளவனென்றோ, அசுத்தமானவனென்றோ சொல்லலாகாது எனக் கடவுள் எனக்குக் காண்பித்தார்.
ECTA   அவர்களைப் பார்த்து, "ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது" எனக் கடவுள் எனக்குக் காட்டினார்.