Bible Language

Acts 12:20 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதனம் கேட்டுக்கொண்டார்கள்.
IRVTA   அக்காலத்திலே ஏரோது தீரியர்மேலும் சீதோனியர்மேலும் மிகவும் கோபமாக இருந்தான். தங்களுடைய தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியால், அவர்கள் ஒன்றுசேர்ந்து, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கி, அவன் மூலமாக சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
ERVTA   தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.
RCTA   அந்நாளில் ஏரோது, தீர், சீதோன் நகரத்தார் மீது வெஞ்சினம்கொண்டிருந்தான். அந்நிலையில் தங்கள் நாடு அரசனுக்குட்பட்ட நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை எதிர்பார்க்க வேண்டியிருந்ததால், அவர்கள் ஒருமனப்பட்டு அவனைக் காண வந்தனர். அரண்மனை மேற்பார்வையாளனான பிலாத்துவைத் தம் வயப்படுத்திக்கொண்டு அரசனது நட்புறவை நாடி நின்றனர்.
ECTA   ஏரோது தீர், சீதோன் மக்கள் மீது கடுஞ்சினம் கொண்டிருந்தான். அவர்கள் மனமொத்தவர்களாய் ஏரோதுவைக் காண வந்தார்கள். அவர்கள் அரண்மனை அந்தப்புர அதிகாரியான பிலாஸ்துவின் நல்லெண்ணத்தைப் பெற அரசனோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார்கள். ஏனெனில் அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்துதான் அவர்கள் உணவுப்பொருள்களைப் பெற்றுவந்தார்கள்.