Bible Language

Joshua 12:1 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
IRVTA   {முறியடிக்கப்பட்ட இராஜாக்கள்} PS யோர்தான் நதிக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
ERVTA   யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தில் இஸ்ரவேலரின் ஆதிக்கம் இருந்தது. அர்னோன் நதியிலிருந்து எர்மோன் மலைவரைக்குமுள்ள எல்லா தேசங்களும் யோர்தான் நதியின் கிழக்குக் கரையோரமுள்ள எல்லா தேசங்களும் அவர்களுக்கு உரியதாக இருந்தது. இப்பகுதிகளைக் கைப்பற்றும்பொருட்டு அவர்கள் தோற்கடித்த எல்லா அரசர்களின் பெயர்களும் இங்குத் தரப்படுகின்றன:
RCTA   யோர்தானின் அக்கரைப் பகுதிக்குக் கிழக்கே ஆர்னோன் ஆறு துவக்கி ஏர்மோன் மலைநாடு வரையிலும், கிழக்கே பாலைவனத்தை நோக்கியிருக்கும் எல்லா நாட்டையும், அதுவரை உள்ள எல்லைக்குள் இருந்த அரசர்களையும் இஸ்ராயேல் மக்கள் முறியடித்து அவர்களுடைய நாடுகளையும் உரிமையாக்கிக் கொண்டார்கள். அவ்வரசர்கள் விவரம் பின்வருமாறு:
ECTA   யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே;