Bible Language

1 Kings 10 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,
IRVTA   {சேபாவின் ராணி சாலொமோனைப் பார்க்க வருதல்} PS யெகோவாவுடைய நாமத்தைக்குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த புகழை சேபாவின் ராணி கேள்விப்பட்டபோது, அவள் விடுகதைகளால் அவனைச் சோதிப்பதற்காக,
ERVTA   சேபாவின் அரசி சாலொமோனின் புகழைப் பற்றி கேள்விப்பட்டாள். எனவே கடினமான கேள்விகள் மூலம் அவனைச் சோதிக்கவந்தாள்.
RCTA   ஆண்டவர் பெயரால் சாலமோன் அடைந்ததிருந்த புகழைச் சாபா நாட்டு அரசி கேள்வியுற்று பல புதிர்களால் அவரைச் சோதிக்க வந்தாள்.
ECTA   ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார்.