Bible Language

1 Chronicles 26:10 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
IRVTA   மெராரியின் மகன்களில் ஓசா என்பவனுடைய மகன்கள்: சிம்ரி என்னும் தலைவன்; இவன் மூத்தவனாக இல்லாவிட்டாலும் இவனுடைய தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
ERVTA   மெராரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாயில் காவலர்கள் ஓசாவும் இருந்தான். சிம்ரி முதன்மையானவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். உண்மையில், இவன் மூத்த மகன் அல்ல, ஆனால் அவனது தந்தை இவனை முதலில் பிறந்தவனாக வைத்தான்.
RCTA   மெராரிக்குப் பிறந்த மக்களில் ஒருவனான ஓசாவின் மக்களின் விவரம் வருமாறு: தலைவனான செம்ரி, (இவன் தலைமகன் அல்லன்; எனினும் ஓசா அவனைத் தலைவனாக நியமித்திருந்தான்)
ECTA   மெராரியின் புதல்வருள் ஒருவர் கோசா. இவர்தம் புதல்வருள் சிம்ரி தலைமகன் அல்லாதவராயிருந்தும், அவர் தந்தை அவரைத் தலைவராக்கியிருந்தார்.