Bible Language

2 Chronicles 26:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
IRVTA   {யூதாவின் ராஜாவாகிய உசியா} PS அப்பொழுது யூதா மக்கள் எல்லோரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் இடத்திலே ராஜாவாக்கினார்கள்.
ERVTA   யூதா ஜனங்கள் அமத்சியாவின் இடத்தில் உசியா என்பவனைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். அமத்சியா, உசியாவின் தந்தை ஆவான். இது இவ்வாறு நிகழும்போது உசியாவின் வயது 16.
RCTA   அப்பொழுது யூதா மக்கள் அனைவரும் மாசியாசின் மகனான ஒசியாசை அவனுடைய தந்தைக்குப் பதிலாக அரியணையில் ஏற்றினார்கள். அப்பொழுது அவனுக்கு வயது பதினாறு தான்.
ECTA   பின்னர், யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுடைய உசியாவை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.