Bible Language

2 Corinthians 11:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
IRVTA   எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே.
ERVTA   நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்து கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக் கொள்ளுங்கள்.
RCTA   ஏனெனில், எவனாவது வந்து நாங்கள் அறிவிக்காத வேறொரு இயேசுவை அறிவிக்கும்போது அல்லது நீங்கள் பெற்றிருக்கும் ஆவியானவரைத் தவிர வேறோர் ஆவியைப் பெற்றுக்கொள்ளச் செய்யும்போது அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்திக்கு ஒவ்வாத வேறொரு நற்செய்தியைக் கொணரும்போது, அவனை எளிதில் பொறுத்துக் கொள்ளுகிறீர்களே;
ECTA   உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.