Bible Language

2 Kings 12:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யோவாஸ் ஆசாரியரை நோக்கி: பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும்,
IRVTA   யோவாஸ் ஆசாரியர்களை நோக்கி: யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுகிற பிரதிஷ்டை செய்யப்பட்ட பொருட்களாகிய எல்லாப் பணத்தையும், மக்களின் வரிப்பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரும்படி அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும்,
ERVTA   (4-5) யோவாஸ் ஆசாரியர்களிடம், “கர்த்தருடைய ஆலயத்தில் அதிக பணம் இருக்கிறது. ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு பரிசுத்தக் காணிக்கையாகப் பணம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆலயவரி மற்றும் தம் விருப்பம்போல் கணக்குப் பார்க்கப்படும்பொழுதெல்லாம் அவர்கள் அதை செலுத்தியுள்ளார்கள். மற்றும் தம் விருப்பம்போலவும் பணம் தருகின்றனர். ஆசாரியர்களாகிய நீங்கள் உங்களுக்கு அறிமுகமான ஒவ்வொருவரிடமிருந்தும் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அப்பணத்தைக் கொண்டுத் தேவையான இடத்தில் ஆலயப்பணி செய்யவேண்டும்” என்றான்.
RCTA   யோவாசு குருக்களை நோக்கி, "வழிப்போக்கர்கள் ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வருகிற பணத்தையும், ஒருவனுடைய மீட்புக்காகக் கொடுக்கப்படுகிற பணத்தையும், மக்கள் தமது விருப்பப்படி கொண்டு வருகிற பணத்தையும்,
ECTA   யோவாசு குருக்களை நோக்கி, "ஆண்டவரின் இல்லத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் பணத்தையெல்லாம்-கணக்கெடுப்பு வரிப்பணத்தையும் ஒவ்வொருவரும் நேர்ச்சையாக அளிக்கும் பணத்தையும் ஆண்டவரின் இல்லத்திற்கு ஒவ்வொருவரும் அளிக்கும் தன்னார்வக் காணிக்கையையும் சேகரியுங்கள்.