Bible Language

2 Chronicles 24:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்கு நாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
IRVTA   அதிக பணம் உண்டென்று கண்டு, லேவியர்கள் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர்கள் அருகில் கொண்டுவரப்படும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனுடைய உதவியாளனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் இடத்திலே வைப்பார்கள்; இப்படி ஒவ்வொரு நாளும் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
ERVTA   பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை அரசனின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள்.
RCTA   நிறையப் பணம் இருக்கிறதென்று கண்டால் லேவியர்கள் அப்பெட்டியை அரசனிடம் கையோடு கொண்டு வருவார்கள். அப்பொழுது அரசனின் செயலனும் பெரிய குருவால் நியமிக்கப்பட்ட அலுவலனும் வந்து, பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்த பின் அதைத் திரும்ப அதன் பழைய இடத்திலேயே வைத்து விட்டுப் போவார்கள். இவ்வாறு நாள்தோறும் செய்து ஏராளமான பணம் திரட்டினார்கள்.
ECTA   பெட்டியில் பணம் நிறைந்து விட்டதைக் கண்ட லேவியர், பெட்டியை அரசரின் அலுவலரிடம் எடுத்துச் சென்றனர். அரசரின் செயலரும் தலைமைக் குருவின் அலுவலரும் பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்தபின் அதைத் திரும்ப அதன் இடத்திலேயே வைத்தனர். இவ்வாறு அவர்கள் நாள்தோறும் செய்து, ஏராளமாகப் பணம் சேர்த்தனர்.