Bible Language

2 Chronicles 29 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அபியாள்.
IRVTA   {எசேக்கியா தேவாலயத்தைத் தூய்மைப்படுத்துதல்} PS எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அபியாள்.
ERVTA   எசேக்கியா அவனது 25 வது வயதில் அரசன் ஆனான். அவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் அபியாள். இவள் சகரியாவின் மகள்.
RCTA   எசெக்கியாஸ் தன் இருபத்தைந்தாவது வயதில் அரியணை ஏறினான். யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். சக்கரியாசின் மகளான அவனுடைய தாயின் பெயர் ஆபியா.
ECTA   எசேக்கியா அரசரானபோது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியா மகளான அபியா என்பவளே அவர் தாய்.