Bible Language

2 Kings 6:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
IRVTA   ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
ERVTA   ஆனால் தேவமனிதனோ (எலிசாவோ) இஸ்ரவேல் அரசனுக்கு ஒரு தூதுவனை அனுப்பி, "எச்சரிக்கையாய் இரு! அந்த வழியாகப் போகாதே! ஆராமியப் படை வீரர்கள் ஒளிந்திருக்கிறார்கள்!" என்று சொல்லச் செய்தான்.
RCTA   ஆகையால் கடவுளின் மனிதர் இஸ்ராயேல் அரசனிடம் ஆள் அனுப்பி, "அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும்; ஏனெனில், அங்கே சீரியர் பதுங்கியிருக்கின்றனர்" என்று சொல்லச் சொன்னார்.
ECTA   அப்பொழுது கடவுளின் அடியவர் இஸ்ரயேல் அரசனிடம் ஆளனுப்பி, "அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும், ஏனெனில் அங்கே சிரியர் பதுங்கி இருக்கின்றனர்" என்று சொல்லச் சொன்னார்.