Bible Language

2 Samuel 12:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
IRVTA   யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான்.
ERVTA   "கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுபடுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்!
RCTA   ஆகையால் ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'இதோ உன் வீட்டின் தீமை உன்மேல் வரச் செய்வோம்; உன் பார்வையிலேயே நாம் உன் மனைவியரை எடுத்துப் பிறனுக்குக் கையளிப்போம். அவன் இச்சூரிய வெளிச்சத்தில் உன் மனைவிகளோடு படுப்பான்.
ECTA   இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; "உன் குடும்பத்தினின்றே நான் உனக்கு தீங்கை வர வழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான்.